சிதலமடைந்த கோவிலை பற்றி சிந்திக்காமல் தங்கத்தை உருக்குவதிலே அமைச்சர் குறியாக உள்ளார் : ஹெச்.ராஜா விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 October 2021, 2:12 pm
H Raja -Updatenews360
Quick Share

ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளதை கண்டுகொள்ளாத அமைச்சர் அமைச்சர் தங்கத்தை உருக்குவதிலே குறியாக உள்ளார்.

கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்துள்ளார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் உள்ள பொன்களை உருக்கி 24 கேரட் சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. ஆனால் அமைச்சர் தங்கத்தை உருக்குவதிலே குறியாக உள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 284

0

0