திமுக நரகாசுர இயக்கம், அது இனி தலைதூக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!

14 November 2020, 1:29 pm
Minister Jayakumar Press Meet - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நரகாசுர இயக்கமான திமுகவை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி அதிமுக ஆட்சி மீண்டும் மலரும் என அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டத்தை மீறி பாஜக வேல் யாத்திரை சென்றால் சட்டம் அதன் கடமையை செய்யும். கொரோனாவுக்கு பயந்து கமல் 4 சுவற்றுக்குள் அமர்ந்து அறிக்கை விடாமல் வெளியே வந்து பார்க்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார்.

Views: - 66

0

0