அம்மாவின் ஆட்சி மூன்றாவது முறையாக தொடரும் : அமைச்சர் காமராஜ் உறுதி.!!
10 August 2020, 4:34 pmதிருவாரூர் : மூன்றாவது முறையும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலை வருகிற தேர்தல் உறுதி செய்யும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொதுமக்களுக்கு முக கவசம் சத்து மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் இவர்கள் அனைவரோடும் கலந்து கொண்டு அவர்கள் கூறுகிற கருத்துக்கள் அடிப்படையில்தான் முதல்வருடன் கலந்து பேசி பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள் அதுதான் என்னுடைய கருத்தும்.
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். தற்போது தொடர் போராட்டம் என அறிவித்து அதனை ஒருநாள் போராட்டமாக மாற்றி விட்டார்கள் அதற்கு காரணம் அவர்களுடைய கோரிக்கைகளை அனைத்தையும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் தற்போது எது முடியுமோ நிறைவேற்றுவதற்குரிய பேச்சுவார்த்தை நடந்ததன் அடிப்படையில்தான் போராட்டத்தை ஒரு நாளாக குறைத்துக் கொண்டு உள்ளார்கள்.அத்தியாவசிய பிரச்சினைகள் எல்லாம் நிதி நிலைக்கு ஏற்ப அவர்களின் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும்.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதுணையாக பணியாற்றி வருகிறார் அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றி வருகிறோம்.
கனிமொழி எம்பியை விமான நிலையத்தில் இந்தியரா என கேட்ட விவகாரத்தில் பாதுகாப்பு படை வீரரை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரவேற்றுள்ளார். மேலும் பேசுகையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சியை இரண்டாவது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது மூன்றாவது முறையும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலை வருகிற தேர்தல் உறுதி செய்யும். அதற்கான பணிகளை நாங்கள் துவங்கி விட்டோம் என அமைச்சர் காமராஜ் கூறினார்.