கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் ‘டிஸ்சார்ஜ்’: சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை..!!

4 February 2021, 10:59 am
kamraj - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் சுயமாக சுவாசிப்பதில் பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு ‘நெகடிவ்’ என சோதனைமுடிவில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து முழுவதும் குணமடைந்த நிலையில் அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் சில நாள்கள் வீட்டில் ஓய்வு பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 12

0

0