தடுப்பூசி மையங்களில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் : நேரில் சென்று ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2021, 11:53 am
Minister Inspection - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில், கொரோனோ தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கொளத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, பொதுமக்களுக்கு கொரோனோ தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனோ தடுப்பூசி பொதுமக்களுக்கு சரியான முறையில் சென்று அடைகிறதா? என்று தடுப்பூசி செலுத்தும் மையத்தில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி. செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் துரைசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி துரைசாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், பேரூர் கழக துணைச் செயலாளர் சுமதி, வட்டார மருத்துவர் தேன்மொழி, செயல் அலுவலர் முருகேஷ், செகரட்டரி இளங்கோ, தாராபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் தண்டபாணி, சுப்பிரமணி, வேல்சாமி, சுந்தரலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 307

0

0