அரசு கொடுக்கும் ரூ.1000 அவங்களுக்கு எல்லாம் கிடையாது… அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரின் பேச்சால் நிகழ்ச்சியில் ‘கலகல’..!!
Author: Babu Lakshmanan10 May 2023, 1:34 pm
செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மேடையில் இருக்கும் எங்களுக்கெல்லாம் கிடையாது என கூறிய அமைச்சர் பேச்சால் சிரிப்பலை ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் திமுகவின் ஈராண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, திமுகவின் இரண்டு ஆண்டுகள் திட்டங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது, செப்டம்பர் 15ஆம் தேதி தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் திட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆயிரம் ரூபாய் மேடையில் இருக்கும் எங்களுக்கு கிடையாது என அமைச்சர் கூறியதும் சிரிப்பலை ஏற்பட்டது.
பின்னர் பேசி அமைச்சர் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியதை குறிப்பிலிருந்து எடுக்க வேண்டுமென எதிர்த்து நின்று சொல்லிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0
0