அரசியலுக்கு அடித்தளம்? 234 தொகுதிகளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய் : ரசிகர்கள் வரவேற்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 மே 2023, 1:14 மணி
Actor Vijay - Updatenews360
Quick Share

அரசியலுக்கு அடித்தளம்? 234 தொகுதிகளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய் : ரசிகர்கள் வரவேற்பு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இதையடுத்து இயக்கத்தை வைத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதனால் விஜய் அரசியலுக்கு வருகிறார் என கணிக்கப்பட்டது.

அதே போல அண்மையில் தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்ட விஜய் ரசிகர்கள், 110 இடங்களில் வெற்றியும் கண்டனர்.

இதையடுத்து அடிக்கடி தனது ரசிகர் மன்றத் தலைவர்களை பனையூர் இல்லத்தில் சந்தித்து, பிரியாணி விருந்தும் வைத்தார். ஒவ்வொரு முறையும் நடக்கு சந்திப்பில் அரசியல் கலந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்
12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்டந்தோறும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க மக்கள் மன்றத்தினரிடம் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதைப்போலவே, 10ம் வகுப்பு தேர்விலும் மாவட்டம் தோறும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களின் விவரங்களை சேகரிக்க உள்ளார்களாம்.

இதில், அந்த 3 இடங்களை பிடிக்கும் மாணவிய- மாணவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து பரிசு வழங்க உள்ளாராம் விஜய். 10-ம் வகுப்பு, பிளஸ் – 2வில் மூன்று பேர் வீதம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ மாணவியருக்கு, தன்கையால் உதவித் தொகைகளை, பரிசுகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

எப்போதும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஜய், தற்போது 234 தொகுதிகளிலும் உள்ள சாதனை படைத்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திப்பது அரசியலுக்கு வித்திட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இது அரசியலுக்கான அடித்தளமாக இருந்தால் நிச்சயம் விஜய் அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • DMK joins TVK தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!
  • Views: - 429

    0

    0