கோவையில் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை : குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையில் அதிகாரிகளுடன் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 1:41 pm
Cbe Minister nehru - Updatenews360
Quick Share

கோவை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் தற்பொழுது வரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முக்கியமாக கோவையில் குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் துணை மேயர் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பில்லூர் அணையை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Views: - 439

0

0