100 கோடி வசூலித்தும் பயனில்லை. புலம்பி தள்ளும் இயக்குனர்.. சினிமாவுல இப்படியும் நடக்குமா.?

Author: Rajesh
15 June 2022, 1:31 pm
Quick Share

டாக்டர் படத்தின் 100 கோடி வசூலுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான படம் டான். கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தினை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

தற்போது வரை 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது டான். இப்படத்தின் மூலம் இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட சிபி சக்ரவர்த்தி இன் ஜினியரிங் முடித்துவிட்டு அட்லீயுடன் தெறி, மெர்சல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

டான் படத்தின் மூலம் தன்னை முழுமையாக நிரூபித்து காட்ட வேண்டும் என்று முயற்சியால் வெற்றியை கண்டுள்ளார் சிபி. இப்படி கொண்டாடத்தில் இருக்க வேண்டிய சிபி சமீபத்தில் ஒரு பேட்டியில் முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் புதிதாக வரும் இயக்குனர்களை மதிக்க வேண்டும்.

வெறும் 10 நிமிடத்தில் கதையை எல்லாராலும் கூறமுடியாது. அதுவும் சிறப்பாக சொல்ல குறைந்தது 2 மணி நேரமாவது கொடுக்க வேண்டும். அப்போது தான் சொல்ல வேண்டிய கதையை முழுமையாக சொல்ல முடியும் என வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

ஏற்கனவே பெரிய நடிகர்கள் தங்களது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது சிபி சக்ரவர்த்தி பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 486

0

0