‘தமிழக அரசும், முதலமைச்சரும் மாணவர்கள் பக்கம் ‘ : மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பேட்டி..!
12 September 2020, 1:53 pmமதுரை : நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மாணவர்களுக்கு தகுதி தேர்வில் எந்தவொரு அச்சமும் தேவையில்லை. தகுதி தேர்வு வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே, உயிர் என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். நீட் தேர்வை இரத்து செய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், முதலமைச்சரும் மாணவர்கள் பக்கம் உள்ளனர். எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்க கூடாது. தகுதி தேர்வுக்காக யாரும் தற்கொலை செய்ய வேண்டாம்.
இது போல துயர சம்பவம் இனி தமிழகத்தில் நடக்க கூடாது. தகுதி தேர்வு முழுமையாக வாழ்க்கை அல்ல, வாழ்க்கையை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வை திணிக்கவில்லை என்கிற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உருவாக கூடாது. நீட் தேர்வு நடைபெற்றால் அதை நாம் எதிர் கொள்ள தான் வேண்டும். மாணவர்கள் கையில் தான் எதிர்காலம் உள்ளது. நீட் தேர்வை எதிர் கொள்வதில் உள்ள சவால்களை மத்திய அரசுக்கு மாநில அரசு தெரிவித்து உள்ளது, என கூறினார்.
0
0