பெண்கள் பாதுகாப்பு பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்…!!
26 January 2021, 3:54 pmநாமக்கல் ; பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா..? என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால் விடுத்துள்ளார்.
ராசிபுரம் அருகே உள்ள ராமகிரிபேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவிற்கு பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர். இது தொடர்பாக அவர் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா..?, அதுமட்டுமல்லாமல், மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் அதிமுக அரசு செய்து வருகிறது, என்று கூறினார்.
0
0