அமைச்சர் சேகர் பாபு செயல் பாபு இல்லை.. SNAKE பாபு : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 12:29 pm
H rAja -Updatenews360
Quick Share

மதுரை : இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, ஸ்நேக் பாபு என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை, அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்த துறை இந்து மதத்தை அழிப்பதற்காக உள்ள துறை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் செயல்பாபு என்று பாராட்டுகிறார். போஸ்டரில் இந்து சமய அறநிலையத்துறையை ,அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் செயல்பாபு இல்லை, ஸ்நேக் பாபு என விமர்சித்துள்ளார்.

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் சேகர்பாபுவை, செயல்பாபு என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 194

0

0