நாங்கள் பிள்ளை பெற்ற பிறகு, மற்றவர்களை பெயர் வைக்க விட்டு விடுவோமா? அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!!

22 September 2020, 12:33 pm
sellur raju - updatenews360
Quick Share

நாங்கள் பிள்ளை பெற்று பிறகு மற்றவர் பெயர் வைக்க விட்டுவிடுவோமா? என்று மதுரை ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜான்சிராணி பூங்கா பகுதியில் 2.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புராதான சின்னங்கள் விற்பனை அங்கன்வாடி மைய கட்டிட பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவில் நகரமாக உள்ள மதுரையில் பல திட்ட பணிகள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை முலம் நமக்கு வருமான அதிகம் கிடைக்கிறது. 2 கோடி மதிப்பில் புரதான சின்னங்கள் விற்பனை கூடம் கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர்களை சுத்தம் செய்ய அதிநவீன கருவிகள் 18 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் நம்பிக்கை இழந்து விட்டார். அதனால் ஜோசியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மதுரை இரண்டாவது கட்டத்தில் உள்ளது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மீதம் இரண்டு ஆண்டுகளில் புதுப்பொலிவு பெறும்.

நாங்கள் பிள்ளை பெற்று பிறகு மற்றவர் பெயர் வைக்க விட்டுவிடுவோமா? திட்டத்தை கொண்டு வந்தவர் நாங்கள் என்பதால், நாங்கள் ஆட்சியில் இருக்குபோதே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம், என்றார்.

Views: - 10

0

0