அமைச்சர் உதயநிதிக்கு வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல்… விசாரணையில் சிக்கிய பாஜக நிர்வாகி!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 7:50 pm

அமைச்சர் உதயநிதிக்கு வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல்… விசாரணையில் சிக்கிய பாஜக நிர்வாகி!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகியாக இருந்த எட்வர்ட் ராஜதுரை அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் சாத்தான்குளம் திமுக நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் (73) என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், நிந்தித்தல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரை என்பவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ டேவிட் உள்ளிட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!