பள்ளி மாணவியிடம் அந்தரங்க போட்டோவை அனுப்ப சொல்லி பாலியல் தொல்லை… போக்சோவில் PT மாஸ்டர் : கோவையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 5:47 pm
Cbe - Updatenews360
Quick Share

பள்ளி மாணவியிடம் அந்தரங்க போட்டோவை அனுப்ப சொல்லி பாலியல் தொல்லை… போக்சோவில் PT மாஸ்டர் : கோவையில் பகீர்!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பூப்பந்து ஆட்ட பயிற்சியாளரான அருண், பயிற்சி பெற வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல், தொந்தரவு, ஆபாச வார்த்தைகள் கூறிய குற்றச்சாட்டுக்காக போக்சோவில் கோவை மத்திய மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் கோவை நகர மத்திய அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் தனியார் பள்ளி மாணவியிடம் உனது நிர்வாண புகைப்படத்தை தனக்கு வாட்ஸ்அப்பிற்கு அனுப்புமாறு மிரட்டி யுள்ளார், ஆபாச வார்த்தைகள் பேசி மயக்கி, தொடர்ந்து தொந்தரவுகள் செய்து வந்தாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பேட்மிண்டன் பயிற்சியாளர் அருண் புருன், தன்னை மாணவிகளிடம் தான் ஒரு ஆணழகனாக இருப்பதாக கூறி பெண்களிடம் மயக்க வார்த்தைகள் பேசி, நீ வா, போ என ஒருமையில் பேசுவாராம்.

செல்போனில் ஆபாச படங்களை காட்டி நீ அந்த மாதிரி இரு, அதை படம் எடுத்து அனுப்பு என்று மிரட்டல் விடுப்பதை செயலாகவே செய்து வந்தது என்றனர் போலீசார்.

கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த அருண் புருன் (28) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 6 மாதங்களாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிக பூப்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை முதலில் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பச் சொன்னவர். அந்த பெண் தனது சாதாரண புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார்.

பின்னர், சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை தனது வாட்ஸ்அப்பிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார். பயந்து போன சிறுமி புகைப்படங்களை அனுப்பவில்லை. இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் அனைத்து மகளிர் மத்திய காவல் நிலைய ஆய்வாளர் வடிவுக்கரசியிடம் புகார் அளித்தனர். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் பேட்மீண்டன் பயிற்சியாளர் அருண் புருன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

பேட்மிண்டன் பயிற்சியாளர் அருண்புருனை போலீசார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் பள்ளி நிர்வாகம் பூப்பந்து பயிற்சியாளரை பள்ளியில் இருந்து உடனடியாக பணிநீக்கம் செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தன.

மன்மத பேட்மிண்டன் பயிற்சியாளர் அருண் புருன் மீது மேலும் பல குற்ற ஆதாரங்கள் உள்ளதாகவும் அதன்படி, ஐந்து பள்ளி மாணவிகளிடம் (சிறுமிகளுடன்) தவறாக நடந்து கொள்ள முயன்றார், என்றும் அவர்களின் படங்களை தனது வாட்ஸ்அப்பிற்கு அனுப்புமாறு கூறி மிரட்டியதாக போலீசார் கிடிக்கி பிடி விசாரணையில் தெரிய வந்தாகவும் அவர்களிடமும் தனிபட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள்.

வேலியே பயிரை மேந்த கதையாக போச்சு கற்றுக் கொடுக்கும் ஆசானே, பெண் பிள்ளை கற்பை சூறையாட செய்ய முயல்வது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்கள்.

Views: - 336

0

0