அரோகரா கோஷம் முழுங்க தேர்தல் பணியை தொடங்கிய அமைச்சர் : தொண்டர்களுடன் டீ அருந்தி உற்சாகம்!!

2 March 2021, 5:08 pm
Minister Kadamboor Raju -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் தேர்தல் பணியினை தொடங்கியுள்ளார்.

பூஜையின் போது கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி பூத் லிஸ்ட் ஆகியவற்றை வைத்து வழங்கினார்.

தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளின் அரோகரா கோஷங்கள் முழங்க அமைச்சர் கடம்பூர் செ ராஜூ சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து 10 ஆண்டுகள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக செய்த நல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.

மேலும் இடையில் அங்கு உள்ள டீக்கடையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுடன் டீ அருந்தினார். இதற்கிடையில் அமைச்சர் பின்னால் வந்த அதிமுக நிர்வாகி செல்வகுமார் என்பவர் வந்த காரை திடீரென தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

சில நிமிடங்கள் நடைபெற்ற சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 17

0

0