ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2025, 10:38 am
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.,
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம்., இன்று 8 வது, 10 வது படிக்கும் சிறுவர்கள் சாராயம் குடிக்கிரான், சினிமா நடிகர்களை பார்க்கிறான், அரசியல் தலைவர்கள் எல்லாம் குடிகார பயலுகலாக இருக்கான்,
நாங்கள் ஆன்மிக தலைவர்களை காட்டுகிறோம் பாரதி எப்படி வாழ்ந்தார், நேர்மையாக காமராஜர் எப்படி இருந்தார்.
அப்படி ஒரு தலைவரை முன்னுதாரணம் காட்ட முடியுமா திமுகவில், சாராய பாட்டில் விற்ற ஊழலில் ஒரு அமைச்சர் ஜெயிலுக்கு போகிறார், நீதிமன்றம் சொல்லியது ஜாமினில் விடுகிறேன் மீண்டும் அமைச்சர் பதவி ஏற்க கூடாது என, ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பி அமைச்சர் ஆக்கினார்.,
தற்போதும் நீ ஜெயிலுக்கு போறீயா, ஜாமின் வேண்டுமா என கேட்ட பின் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்., இன்னொருவர் பொன்முடி என்ற அமைச்சர் சாமியை குறை சொன்னார் அவரும் ராஜினாமா பன்னிட்டார்.,
ஐ.பெரியசாமி பெயரில் வழக்கு போய்டு இருக்கு, மூர்த்தி பெயரில் வழக்கு போய்டு இருக்கு, எல்லோரும் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைய போறாங்க.
இது மட்டுமில்லை அவர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போகும் போது முதல்வரும் ஜெயிலுக்கு போவார் என பேசினார்.,