தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரிழப்பு : அமைச்சர் கடம்பூர் ராஜு இரங்கல்!!

25 September 2020, 4:21 pm
Minister Kadamboor raju - updatenews360
Quick Share

தூத்துக்குடி : எஸ்.பி.பி. மறைவு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பெரும் இழப்பு என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்ட போது அவர் மீண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வேண்டினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பாடகர் ,குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் பிரபலமானவர்.

கேளடி கண்மணி படத்தில் இந்த மண்ணில் காதல் இன்றி என்ற பாடல் மூலமாக மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தார். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பெரும் இழப்பு என்றார்.

Views: - 3

0

0