அதிசயமான பசு… இடுப்புக்கு மேல மாடு… இடுப்பு கீழே மனித உருவில் பிறந்த கன்றுக்குட்டி : அதிர்ச்சியில் உறைந்த விவசாயி குடும்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 12:41 pm
Calf Dead - Updatenews360
Quick Share

அதிசய பசு கன்று… இடுப்புக்கு மேலே மாடாகவும் இடுப்புக்கு கீழே ஆண் பெண் உருவ அமைப்புடன் பசு கன்று…. ஆச்சரியத்தில் ஏராளமானோர் சென்று வேடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் கேரளா பெருமாள். இவர் தனது தோட்டத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இதில் ஒரு பசுமாடு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு இடுப்பு பகுதிக்கு மேலே பசு மாடு போன்றும் இடுப்பு பகுதிக்கு கீழே ஆண் உடல் தனியாகவும் பெண் உடல் தனியாகவும் இணைந்து இருப்பது கண்டு கேரளா பெருமாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்ததுடன் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர். கன்று பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.

இந்த அதிசய கன்றை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பசு கன்று உடலில் ஆண் உருவம் பெண் உருவம் போன்றும் ஆறு கால்களுடன் இருந்ததால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Views: - 205

0

0