கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை : வயிற்றில் குழந்தையோடு இறந்த இளம்பெண்!!

16 November 2020, 2:16 pm
Pregnant Lady dead - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி பெண் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி அடுத்த களரூர் பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 30) இவரது மனைவி நந்தினி (வயது 25)  இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

பத்துமாத நிறைமாத கர்ப்பிணியாக இந்த பொழுது நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்து உள்ளனர். அவரது கணவர் ஜீவாவிடம் ஒரு சில மருந்துகள் இங்கு இல்லை எனவும் கூறி அவரிடம் வெளியில் வாங்கி தருமாறு செவிலியர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மருந்துகள் வாங்கிக் கொடுத்தும், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்துள்ளதாகவும் இந்நிலையில் நந்தினி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் என அவசர அவசரமாக மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு சோதித்த மருத்துவர்கள் கடந்த மூன்று மணி நேரத்திற்கு முன்பே நந்தினி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையாக சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவம் குறித்து அங்கு வந்த நகர போலீசார் மற்றும் டி.எஸ்.பி தங்கவேலு ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 23

0

0