மிஸ் கூவாகம் தேர்வு.. திருநங்கை குழந்தைகளை வெறுக்காதீங்க : பட்டத்தை தட்டிச் சென்ற ஈரோடு ரியா உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2024, 8:52 am

மிஸ் கூவாகம் தேர்வு.. திருநங்கை குழந்தைகளை வெறுக்காதீங்க : பட்டத்தை தட்டிச் சென்ற ஈரோடு ரியா உருக்கம்!

விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மிஸ் கூவாகம்–2024 போட்டியில் பங்கேற்றோரை, தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநங்கைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து, மிஸ் கூவாகம்–2024 போட்டிக்கான முதல் சுற்றில் திருச்சி, சேலம், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கொல்லம், ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர்.

இதில், இவர்களின் நடை, உடை, பாவனை மூலம் 15 பேர், 2வது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி திடலில் மிஸ் குவாகம்–2024 கலை நிகழ்ச்சியும், மிஸ் குவாகம் இறுதிசுற்று தேர்வும் நடந்தது.

மேலும் படிக்க: விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்.. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்!

இறுதி சுற்றுக்கான முதல் சுற்றில், நடை, உடை, பாவனை போட்டியில் தூத்துக்குடி மேகா, கோவை எமி, தஞ்சை ஜொஸ்மா, விருதுநகர் ரேணுகா, ஈரோடு ரியா, சென்னை யுவாஞ்சலின், சேலம் கதிஜா ஆகிய 7 பேர் தேர்வாகினர்.

இதனையடுத்து, இறுதி சுற்று கேள்வி பதில் சுற்று நடந்தது. நிறைவாக ஈரோடு ரியா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.

2ம் இடத்தில் தூத்துக்குடி மேகாவும், 3ம் இடத்தில் சென்னை யுவாஞ்சலின் ஆகியோர் தேர்வாகினர். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது.

3 பேருக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் மோகனாம்பாள் வரவேற்றார். அருணா, சுபிக்ஷா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஏராளமான திருநங்கைகள், பொது மக்கள் பங்கேற்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!