”எனக்கு சித்தப்பா தா வேணும்” : காவல் நிலையத்திற்கு வந்த முறை தவறிய காதல் விவகாரம்!!

2 February 2021, 12:43 pm
Love Issue - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : குன்றத்தூர் போலீஸ்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்த காதல் ஜோடியில், காதலன் பிளேடால் திடீரென கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷா(வயது 20), இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(வயது 25), என்பவருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருநெல்வேலியில் இருந்த இருவரையும் போலீசார் குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அப்போது இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயே ரஞ்சித் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை கர, கரவென அறுத்து கொண்டார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சில வருடமாக காதலித்து வந்து திருமணம் செய்து கொண்டதாகவும் தனது காதலனுடன் செல்ல விருப்பம் என அந்த பெண் தெரிவித்ததையடுத்து இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்திலேயே திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோதே போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயே காதலன் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நிஷாவுக்கு ரஞ்சித் சித்தப்பா முறை என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 24

0

0