காணாமல் போன 32 காரைக்கால் மீனவர்கள் : தொடர்பு கொள்ள முடியாமல் மீன்வளத்துறை தவிப்பு!!

26 November 2020, 1:11 pm
Karaikkal Fisherman - Updatenews360
Quick Share

கடலுக்கு சென்ற 32 காரைக்கால் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

வங்கக்கடலில் மையம் கொண்ட அதி தீவிர புயலான நிவர் புதுச்சேரி – மரக்காணம் இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது.

புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி, கரைக்காலில் மணிக்கு 120 முதல் 140 கிமீ வரை பலத்த காற்றும், மழையும் பெய்தது.

புயலை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. அதே போல கடலுக்க சென்றவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால்லில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் புயல் காரணமாக ஊர் திரும்பவில்லை.

சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வரை 10 படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத் சேர்ந்த 192 மீன்பிடி விசை படகுகளில் 102 படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த. அதே போல 67 மீன் பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.

இந்த நிலையில் 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையல், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 12

0

0