கோவையில் மாயமான பள்ளி மாணவிகள் மீட்பு… விசாரணையில் பகீர் காரணம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 11:57 am

கோவை பிரஸ்காலனியில் உள்ள தம்பு உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் திடீர் மாயமான நிலையில் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பிரஸ் காலனி தம்பு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மூன்று பேர் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் மாலை முதல் காணவில்லை என மாணவிகளின் பெற்றொர்.

பெரியநாயக்கன்பாளைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாணையில் மாணவிகள் சென்னையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பெரியநாயக்கன்பாளையம் அழைத்து வந்து கொண்டு வருகின்றனர்.

மாணவிகள் வந்த உடனே சென்னை சென்ற காரணம் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • sachin's daughter went on a date with a Bollywood actor கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!