மக்கள் பிரதிநிதிகளை விடாது துரத்தும் கொரோனா : எம்.எல்.ஏ. கருணாஸுக்கு தொற்று உறுதி..!

5 August 2020, 4:21 pm
Karunas mla - updatenews360
Quick Share

திண்டுக்கல் : திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதேவேளையில், நோய் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நோய் தொற்றுக்கு அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அண்மையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து நோய் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது பாதுகாவலருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கருணாஸுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Views: - 5

0

0