‘மாணவர்களுக்கு எந்த சாமியும் கொடுக்காததை எடப்பாடி பழனிசாமி செய்து கொடுத்தார்’ : எம்.எல்.ஏ. கருணாஸ் புகழாரம்..!
16 September 2020, 6:30 pmசென்னை : கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் வேண்டிய எந்த சாமியும் கொடுக்காததை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து கொடுத்துள்ளார் என எம்.எல்.ஏ. கருணாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதேபோல, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை எழுதும் மாணவர்களை தவிர்த்து, பிற ஆண்டு மாணவர்கள் மற்றும் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து வரும் மாணவர்கள், எடப்பாடியாரை தோலில் தூக்கி வைத்து கொண்டாடாத குறையாக நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ. கருணாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது :- கொரோனா பேரிடர் காலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற குழப்பத்தில் இருந்து வந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து, அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்து, திக்குமுக்காட வைத்து விட்டார்.
எனவே, அரியர் மாணவர்களின் அரசனாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார். பொதுத்தேர்வு எழுதவிருந்த 10ம் வகுப்பு மாணவர்கள் வேண்டிய சாமிகள் எதுவும் செய்யாததை முதலமைச்சர் பழனிசாமி செய்து கொடுத்து விட்டார், எனக் கூறினார்.
0
0