கூட்டுறவு கடன் சங்கத்தில் 1 கோடி ரூபாய் வரை பண மோசடி:கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் விசாரணை

21 June 2021, 10:42 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 1 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வேட்டமங்களத்தை அடுத்து உள்ளது புங்கோடை குளத்துப்பாளையம். இந்த கிராமத்தில் வேட்டமங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சார்ந்த விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் என 3000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த வங்கியில் செமிப்பு கணக்கு, வைப்பு நிதி கணக்கு, விவசாய கடன், தங்க நகைக் கடன் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அச்சங்கத்தின் செயலாளராக இருந்த கிட்டான் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்து விட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு வரும் விவசாயிகள் நகைக்கடன் பெற நகைகள் கொடுக்கப்பட்ட போதும், ரசீதுகள் ஏதும் வாங்காகதால் அதை கேட்க சென்றுள்ளனர். அங்கு அவர்களது பெயரில் நகைக்கடன் வழங்கப்பட்டது போன்று கணக்கு எழுதப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தகவலானது கிராமங்களில் பரவியதை அடுத்து பலரும் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் எடுக்க முயற்சி செய்த போது அதில் பணம் இல்லை, தங்க நகைக்கள் எடை குறைவாக காட்டப்பட்டுள்ளது. டெபாசிட் பணம் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்துள்ளது.

இது போன்று சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கரூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பாஸ்கருக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இன்று காலை 11 மணி முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு தாங்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர். பண மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 217

0

0