மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வருகை : பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அமைச்சர் வேண்டுகோள் ..!!!

24 April 2021, 11:49 am
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்கும் விதமாக, மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்து விட்டது. நாளொன்று 3.46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் முன்பை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனால், பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதுவரையில் 15 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட வாரியாக மே 1ம் தேதி முதல் தடுப்பூசி முகாமை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையில், அடுத்த கட்டமாக 4 லட்சம் தடுப்பூசிகள் புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளன. இவை அனைத்தும் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி தடையின்றி கிடைப்பதற்காக கூடுதல் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 169

0

0