லேப்டாப், செல்போன்களில் 800-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்.. போலீஸாரையே உறைய வைத்த காசி!

11 November 2020, 11:24 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் மீட்டுள்ளனர்..

இணையதளங்கள் வழியாக நட்பு ஏற்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மயக்கி, காதலிப்பது போல் நடித்து ஆபாச படம் எடுத்து இன்டெர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசி அழித்த ஆயிரகணக்கான ஆபாச வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றிலிருந்து மீட்டது சிபிசிஐடி போலிஸ். மேலும் காசி மூலம் ஆபாச வீடியோக்களை பெற்ற கூட்டளிகளையும் சிபிசிஐடி தேடிவருகிறது.

காசியின் 5 நாட்கள் காவல் இன்று முடிந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் காசி ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும் 150க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து தெரியவந்துள்ளது. மேலும் காசியின் வழக்கில் 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபடும் எனவும், புகார் தெரிவிக்கபடும் பெண்களின் புகார்கள் பாதுகாக்கபடும் எனவும் சிபிசிஜடி டி.எஸ்.பி அனில்குமார் தெரிவித்தார்.

Views: - 23

0

0