வாக்களிப்பதில் அதிகம் படித்தவர்களே தவறு செய்கின்றனர் : தலைமை செயலாளர் சண்முகம் கருத்து!!!
25 January 2021, 2:18 pmசென்னை : யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் படித்தவர்களே அதிகம் தவறு செய்வதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம் பங்கேற்றார்.
அவர் நிகழ்ச்சியில் பேசும் போது, யார் மக்களுக்கு நல்லது செய்வார், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு குழப்பம் இருக்கும் என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமை என கூறினார்.
மேலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் படித்தவர்களே அதிகம் தவறு செய்வதாகவும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பத்தால் அதிகம் தவறு செய்வதாகவும் தலைமை செயலாளர் சண்முகம் சுட்டிக்காட்டி பேசினார்.
தன்னுடைய அரசாங்கத்தை நான் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என அவர் நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.
0
0