உங்களால்தானே உயிர் சுமந்தேனே : குட்டிகளை முதுகில் சுமந்து சென்ற தாய் கரடி… வைரலாகும் போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 1:12 pm
Bear With Cubs - Updatenews360
Quick Share

நீலகிரி : இரண்டு குட்டி கரடிகளை முதுகில் சுமந்து செல்லும் தாய் கரடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தாய் கரடி ஒன்று தன் முதுகில் இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக சுமந்து சாலையை கடந்து எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த காட்சிகளை அவ்வழியே சென்ற பயணித்த பயணி ஒருவர் குட்டிகளுடன் சாலையைக் கடக்கும் கரடியின் காட்சிகளை பதிவு செய்துள்ளார். தற்போது அவ்வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரல் காட்சிகளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 531

0

0