மகன்கள் கைது: போலீசார் முன்னிலையில் தீக்குளித்து உயிரிழந்த தாய்…!!

24 November 2020, 9:59 am
police station - updatenews360
Quick Share

நெல்லை: சுத்தமல்லியில் 2 மகன்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

மகன்கள் பிரசாந்த், பிரதீப் கைது செய்யப்பட்டதை கண்டித்து காவல்துறையினர் கண்முன்னே அவர்களது தாய் சகுந்தலா தீக்குளித்தார். தீக்குளித்த சகுந்தலாவை காப்பாற்ற காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் கண்முன்னே பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 0

0

0