குடும்பத்தகராறில் விபரீதம்:தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை

Author: kavin kumar
1 October 2021, 4:56 pm
Quick Share

செங்கல்பட்டு:பட்டப்பகலில் குடும்பத்தகராறில் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்த சம்சுதீன். இவர் மனைவி தாஜ் நிஷா ஆகிய இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே எந்த வித பேச்சுவார்த்தை இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் இன்று சம்சுதீன் மனைவி தாஜ் நிஷா, இவரது மகள் ஷகானா இவர்கள் இருவரும் இன்று கணவர் சம்சுதீன் வழக்கம்போல் அவருடைய கடைக்கு சென்றிருந்த பொழுது தாயும் மகளும் வீட்டில் ஒரே அறையில் புடவையை கொண்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாய் மகள் தற்கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது தாஜ் நிஷாவின் கணவர் சம்சுதினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 232

0

0