சாலையில் ஊர்ந்த மலைப்பாம்பு : லாவகமாக கையில் பிடித்த இளைஞர்.. வைரலாகும் வீடியோ!!

By: Udayachandran
15 September 2021, 7:26 pm
Indian Python Caught -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை லாவகமாக பிடித்த இளைஞர் ஒருவர் அதனை காட்டிற்குள் கொண்டு சென்றுவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் பன்னிமடையை அடுத்த தாளியூர் பகுதியில் சாலையில் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனை அவ்வளியாக வந்தவர்கள் பயம் கலந்த ஆர்வத்துடன் பார்த்து நின்றனர்.

சாலையில் வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி மலைப்பாம்பு செல்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அழகர் என்ற இளைஞர், சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த மலைப்பாம்பின் தலையை ஒரு குச்சியை வைத்து அழுத்திப் பிடித்து, லாவகமாக பாம்பை தூக்கினார்.

தொடர்ந்து அந்த குட்டி மலைப்பாம்பை அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டு வந்தார். இளைஞர் தைரியமாக மலைப்பாம்பை பிடித்து காட்டிற்குள் விட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 84

0

0