தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறாரா தோனி.? அதுவும் அந்த பிரபல நடிகை நடிக்கும் படமா.? செம அப்டேட்..!

Author: Rajesh
10 May 2022, 2:11 pm

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்தநிலையில் எம் எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி தமிழகத்தில் ஈடுபட இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதில் முதல்கட்டமாக நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை அவர் தயாரிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது எனக் கூறப்படுகிறது.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?