மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை..? மீட்புப்பணியில் சிக்கல்

9 August 2020, 2:04 pm
Landslide_UpdateNews360
Quick Share

திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் மண்ணில் புதைந்த அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ராஜமலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணி 3 நாட்களாக நீடிக்கிறது.

27 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மண்ணில் புதைந்தவர்களின் முழு விவரங்கள் தெரியவில்லை. தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்கள். மண்ணுக்கு அடியில் 42 பேர் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

அவர்களில் யாரும் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். 2018-19ம் ஆண்டின் போது ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்தில் ராஜமலை பாதிக்கப்படவில்லை. ஆகையால் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இதனிடையே இடுக்கியில் 22 சென்டி மீட்டர் மழை கொட்டி உள்ளது. மழை நீடிக்கக்கூடும் என்பதால் அனைத்து சடலங்களையும் மீட்க முடியுமா என்று தெரியவில்லை. மழை தொடர்வதால் மீட்புப்பணியில் தொடர் தொய்வு காணப்படுகிறது. 

Views: - 5

0

0