பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கொலை : தலையில் கல்லை போட்டு கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 9:25 pm

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கொலை : தலையில் கல்லை போட்டு கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி!

திண்டுக்கல் ஓ எம் ஆர் பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் கோபால் என்ற சபை கோபால். இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்தரை புதுப்பட்டி புதுக்குளம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு மார்பன் அவர்கள் கொடூரமாக கொலை செய்து அப்படியே விட்டு விட்டு சென்றனர்.

இப்பகுதி வழியாக சென்றவர்கள் இரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடக்கிறார் என காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்தும் கொலை செய்தது யார் என்பது குறித்தும் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!