கஞ்சா புகைத்த மருமகன்: புத்திமதி கூறிய தாய்மாமன் வெட்டிக்கொலை…!!

11 November 2020, 11:14 am
Murder_UpdateNews360
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கஞ்சா புகைத்த இளைஞருக்கு அறிவுரை கூறிய தாய்மாமன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் கோமான் நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். தோட்ட காவலாளியான இவர் நேற்று காலை தான் பணியாற்றும் தோட்டத்தில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் 2 பேர் சாமுவேலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சாமுவேலுக்கும், அவரது அக்கா குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், இருகுடும்பத்திற்கும் இடையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவாத்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சாமுவேல் வேலை பார்த்த தோட்டத்தின் அருகே அவரின் அக்கா மகன் விமல்ராஜ் தனது நண்பன் சகாய ராஜூவுடன் கஞ்சா புகைத்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த சாமுவேல், தன் மருமகனுக்கு புத்திமதி கூறியுள்ளார்.

Ganja - Updatenews360

மேலும், இது தொடர்ந்தால் அக்காவிடம் கூறி விடுவேன் என விமல்ராஜை எச்சரித்துள்ளார் சாமுவேல். இதனால், கோபமடைந்த விமல்ராஜ் சாமுவேலை வெட்டிக்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நற்புத்தி கூறிய தாய்மாமனை மருமகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0