ஒரு பக்கம் முருகன், மறுபக்கம் உதயநிதி : தினமும் கைது வேட்டையில் தமிழக காவல்துறையினர்!!

21 November 2020, 5:02 pm
Udhayanithi - Updatenews360
Quick Share

நாகை : இரண்டாவது நாளாக காவல்துறையின் தடையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரையை நேற்று நாகை மாவட்டம் திருக்குவளை கலைஞர் பிறந்த வீட்டில் இருந்து தொடங்கினார். இந்த நிலையில், காவல்துறையின் அனுமதியை மீறி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக நாகை அக்கரை பேட்டை மீன் பிடி துறைமுகத்தில் காவல்துறை தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் மீனவர்களின் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து மீனவர்களோடு படகில் பயணம் செய்த உதயநிதி, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்த உதயநிதியை தடுத்து நிறுத்திய போலிசார் கைது செய்தனர். உதயநிதி கைது சம்பவத்தை கண்டித்து திமுகவினர் தரையில் படுத்து, அவர் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திமுகவினருக்கும், காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்களை வலுக்கட்டாயமாக போலிசார் கைது செய்தனர். கைது செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த பின் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், என்னுடைய பிரச்சாரத்தை கண்டு அதிமுக அரசு பயப்படுகிறது. ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி, என்னுடைய பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் கைது செய்கிறார்கள். குறைவான நபர்களே பங்கேற்ற எங்களை கைது செய்கிறார்கள்.

பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா மோடி, கலந்து கொண்டார்கள், அவர்களை கைது செய்யவில்லை. ஆனால் தற்போது எங்கள் பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது செய்கிறார்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை தலைவரிடம் பேசி முடிவெடுப்போம். விடுதலை செய்தார்கள் என்றால் இன்றைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவேன் என்றார்.

Views: - 0

0

0