சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் பெண் யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 4:33 pm
Sathy Elephant Dead -updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் சரகத்திற்கு உட்பட்ட காராட்சிகொரை வனப்பகுதியில் யானை ஒன்று வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு செய்த போது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வன கால்நடை மருத்துவர் வந்த பின்னர் இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்த பின்னரே யானையின் இறப்புக்கு உண்டான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் மர்மமான முறையில் யானைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Views: - 419

0

0