ஈரானில் குமரி மீனவர் மர்ம மரணம் : ஆட்சியரிடம் மீனவ அமைப்புகள் கோரிக்கை!!

6 May 2021, 2:39 pm
TN Fisher Dead - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஈரான் நாட்டில் தங்கி இருந்து மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர் நேற்று விமானம் மூலம் ஊர் திரும்ப இருந்த நிலையில் திடீரென அவர் இறந்து விட்டதாக வந்த தகவலால் கடற்கரை கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்து வருவதாக மீனவ அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அந்தவகையில் நாகர்கோவிலை அடுத்து உள்ள மேல மணக்குடியை சேர்ந்த சகாய ஆண்டனி என்பவர் ஈரானில் தங்கி இருந்து மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று விமானம் மூலம் சொந்த ஊருக்கு திரும்ப இருந்த நிலையில் திடீரென அவர் இறந்து விட்டதாக வந்த தகவலால் கடற்கரை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர் உடலை சொந்த ஊர் கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ அமைப்புகள் கோரிக்கை மனு அளித்தனர்..

Views: - 105

0

0