பெண் ஓட்டுநருக்கு சொந்தமான ஆட்டோவுக்கு மர்மநபர் தீ வைப்பு : புதுச்சேரியில் பரபரப்பு!!

29 November 2020, 1:41 pm
Auto Fire - Updatenews360
Quick Share

புதுச்சேரி : பெண் ஓட்டுனருக்கு சொந்தமான ஆட்டோவை பெட்ரோல் உற்றி எரித்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). சொந்தமான ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவரின் இரண்டு மகன்களும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு சவாரிக்கு சென்ற பின்னர் இரவு வீட்டின் அருகே லட்சுமி தனது ஆட்டோவை நிறுத்தி சென்றுள்ளார். இதனிடையே இன்று அதிகாலை மர்ம நபர்கள் லட்சுமியின் ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி எரித்து தப்பி சென்றனர்.

இதனையடுத்து ஆட்டோ எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 19

0

0