தந்தையுடன் 10 வயது மகளை படுகொலை செய்த மர்மகும்பல் : வேலூர் அருகே வெறிச்செயல்!!

3 October 2020, 5:46 pm
Vellore Murder - updatenews360
Quick Share

வேலூர் : ஒடுகத்தூர் அருகே விவசாயம் செய்து வந்த விவசாயி மற்றும் அவரது 10 வயது மகளை மர்மநபர்கள் கொலை செய்து தப்பியோடியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஒடுகத்தூர் ஜார்தான் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி பாஞ்சாலையுடன் வேப்பங்குப்பம் ரங்கன் கொட்டாய் பகுதியில் அன்ஷர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் கடந்த 25 வருடங்களாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் பொன்னுசாமி(வயது 42) அவரது 10 வயது மகள் தீபா ஆகிய இருவரையும் கழுத்து மற்றும் உடல் பகுதியில் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சென்ற வேப்பங்குப்பம் காவல்துறையினர் மற்றும் டிஐஜி காமினி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சிம்பா மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகின்றனர்

Views: - 42

0

0