அரசு அலுவலகத்தில் புகுந்து ஊழியரின் கைப்பையை திருடிய மர்மநபர் : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2021, 12:14 pm
Office Bag Theft - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அரசு அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஊழியரின் கைப்பையை திருடிச் சென்ற‌ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் லதா. கடந்த திங்கட்கிழமை அன்று அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் லதா உட்பட அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து திரும்பி வந்துபோது தன் இருக்கையில் இருந்த கைப்பை திருட்டு போயிருப்பது லதாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் அலுவலகத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தில் புகுந்து லதாவின் கைப்பையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்

அரசு அலுவலகத்திலேயே புகுந்து ஊழியரின் கைப்பையை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 303

1

0