கோலம் போட்ட பெண்ணை ‘போட்டுத்தள்ளிய‘ விஜய் ரசிகர் : கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்!!

25 September 2020, 11:27 am
Murder Arrest - updatenews360
Quick Share

நாகை : சீர்காழியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் கோலமிட்டு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி திருவள்ளுவர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சித்ரா (வயது 49) கடந்த 18 ஆம் தேதி அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்றது.

தனிப்படை போலீசார் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி தொடர்புகளை கொண்டு விசாரணை நடத்தியதில் சித்ராவின் வீட்டு மாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பிருந்தா (வயது 27) என்பவருடன் சட்டநாதபுரம் கணபதி நகரைச் சேர்ந்த சையது ரியாசுதீன் (வயது 29) என்பவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து நேற்று இரவு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியான சையது ரியாசுதீன் மற்றும் பிருந்தாவை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சேத்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகள் பிருந்தா 2014ஆம் ஆண்டு சீர்காழியில் கம்ப்யூட்டர் சென்டரில் பணியாற்றிய போது அவருக்கும் சையது ரியாசுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பிருந்தாவுக்கும் அரியலூரை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே சையது ரியாசுதீனும், பிருந்தாவின் தந்தை குணசேகரனின் சேர்ந்து கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணமாகி ஐந்து மாதத்தில் செல்வகுமார் சிங்கப்பூரில் பணிக்காக சென்றுள்ளார். இதனை அடுத்து பிருந்தா, சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். இதனைத் அடுத்து பிருந்தாவுக்கும் சையது ரியாசுதீனுக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கால நேரமின்றி செல்போனில் பேசிக் கொண்டிருப்பது மட்டுமன்றி நேரில் சந்தித்தும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

இதனை கண்ட சித்ரா கண்டித்ததுடன் சையது ரியாசுதீன் பிருந்தா வீட்டிற்கு வருவதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சையது ரியாசுதீன் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சித்ராவை கொலை செய்யத் திட்டமிட்டு இரண்டு முறை ஒத்திகை பார்த்து 18ஆம் தேதி காலை 3:30 மணிக்கு சித்ராவின் வீட்டு அருகே காத்திருந்து 4:25 மணிக்கு சுத்தியல் போன்ற அமைப்புடைய இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சையது ரியாசுதீன் மற்றும் பிருந்தாவை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு பைப் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இக்கொலை வழக்கில் விரைந்து துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீ நாதா மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Views: - 5

0

0