அதிமுக எம்பியின் வீட்டில் தாக்குதல் நடத்த திட்டம் : நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார் விசாரணை..!!

24 November 2020, 2:08 pm
nagerkovil MP bomb 1 - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமநாதபுரம் பகுதியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயகுமார் வசித்து வருகிறார். இன்று காலையில் அவரது வீட்டு வாயில் முன்பு சந்தேகத்திற்கு உரிய முறையில், பிளாஸ்டிக்கால் ஆன ஐஸ்கிரீம் பந்து காணப்பட்டது. அந்தப் பகுதியில் திடீரென அந்த பந்து காணப்பட்டதால் குழப்பத்திற்கு உள்ளான விஜயகுமார் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து சோதனையிட்டபோது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

அதைத்தொடர்ந்து, மோப்பநாய் வெடிகுண்டு நிபுணர்கள்ஆகியோர் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட நாட்டு வெடிகுண்டுதான் அது என்பது தெரியவந்தது. உடனே அதை செயல் இழக்க வைத்த போலீசார் அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Views: - 0

0

0