கோவையில் தேசிய கார் பந்தயம் : முதல் சுற்றில் சென்னை, திருச்சூர், பெங்களூர் வீரர்கள் வெற்றி..!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 8:45 pm
Car and Bike Race -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் முதல் சுற்றில் சென்னை, பெங்களூரு மற்றும் திருச்சூரை சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர்.

கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே ட்ராக்கில் 24வது தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றி 2வது நாளாக இன்று நடைபெற்றது.

பார்முலா 4 எல்ஜிபி பிரிவில் நடைபெற்ற 2வது கார் பந்தயத்தில் சென்னையைச் விஷ்ணு பிரசாத் முதலிடமும், தொடர்ந்து நடைபெற்ற 3வது பந்தயத்தில் 2வது இடமும் பிடித்தார். 3வது பந்தயத்தில் பெங்களுரைச் சேர்ந்த சோஹில் ஷா முதலிடம் பிடித்தார்.

பார்முலா 4 எல்ஜிபி பிரிவில் நடைபெற்ற பந்தயத்தின் இடையே கார் ஒன்று விபத்துக்குள்ளானதால் போட்டியில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

நோவிஸ் கோப்பை பிரிவில் பெங்களூரைச் சேர்ந்த சிறுவன் ருஹான் ஆல்வா கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் முதலிடம் பிடித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியான இன்று நடைபெற்ற 3வது பந்தயத்திலும் அவர் முதலிடம் பிடித்தார். கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஹூப்ளியைச் சேர்ந்த வீரர் அனிஷ் தாமோதர ஷெட்டி, திருச்சூர் ஆல்வின் சேவியரைக் காட்டிலும் 8.643 வினாடிகள் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார்.

இதில் 18 மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். ட்ராக்கில் சீறிப் பாய்ந்த கார் மற்றும் பைக்குகளின் வேகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Views: - 265

0

0