விழுப்புரம் சிறைச்சாலையில் தலைகீழாக பறந்த தேசியக் கொடி : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 1:44 pm

விழுப்புரம் : மாவட்ட சிறைச்சாலையில் தேசியக் கொடியை தலைகீழாக பறந்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சிறைத்துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையை கட்டி திறக்கப்பட்டது.

இந்த சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சிறைச்சாலை கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டு சென்ற சிறைக்காவலர்கள் கவனிக்காததால் அந்த வழியாக வந்த கிராம மக்கள் மாவட்ட சிறைச்சாலையில் தலைகீழாக பறந்துகொண்டிருக்கும் தேசியக்கொடியை படமெடுத்து இணையதளங்களில் பரவச் செய்தனர்.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் தொடர்புகொண்டு சிறைச்சாலையில் உள்ள தேசியக்கொடியை அவசரமாக கீழே இறக்கி நேராக பறக்க விட்டனர். இருப்பினும் இந்த படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?