தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நவகண்ட சிலை: அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த உரிமையாளர்…பாராட்டு தெரிவித்த ஆட்சியர்!!

Author: Aarthi Sivakumar
14 September 2021, 1:15 pm
Quick Share

சிவகங்கை: தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பத்தை நிலத்தின் உரிமையாளர் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் சங்கையா என்பவருக்கு சொந்த நிலத்தில் கிணறு தோண்டும் போது 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே, திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் இரண்டும், காளையார்கோவில் அருகே உள்ள மல்லலில் ஒரு சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சிலையை தொல்லியல் குழுவினர் நவகண்ட சிலையை ஆய்வு செய்தனர். இதில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் என்பது தெரியவந்ததையடுத்து, நிலத்தின் உரிமையாளர் அச்சிலையை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

தன் அரசன் போரில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு வீரர் தலையை பலி கொடுக்கும் நிகழ்வை நவகண்டம் சிற்பம் சித்தரிப்பதாக தொல்லியல் துறையில் கணித்துள்ளனர்.

வரலாற்றை நினைவு கூறும் சிலையை ஒப்படைத்த நிலத்தின் உரிமையாளர் சங்கையாவிற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Views: - 198

0

0