மதுரையில் ஆக்சிஜன் தேவையா? ஆட்சியர் அலுவலகத்தில் அவசர தேவைக்காக இருப்பு வைப்பு!!

17 May 2021, 10:18 am
Oxygen - Updatenews360
Quick Share

மதுரை : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் அவசர தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சுமார் 8,500 கடந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் சாதாரண படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்பட்டால் அதை உடனடியாக வழங்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் மருத்துவமனைக்கு உடனடியாக வழங்குவதற்காக தயாரான நிலையில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளை தவிர்க்க இந்த செயல் வரவேற்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

Views: - 96

0

0